Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
ரோகிணி எதற்காக என்னையே எல்லாரும் குறி வச்சு பேசுறீங்க என கேட்கிறார். உடனே விஜயா முழு பூசணிக்காயை சோத்துல மறைத்தவ நீதான். நீ என்ன வேணாலும் பண்ணுவ என்கிறார். ஆண்ட்டி நீங்க கூட நம்பலையா என ரோகிணி கேட்க உனக்கு தான் இதெல்லாம் கைவந்த கலையாச்சே என்கிறார் விஜயா.
பின்னர் அண்ணாமலை நிறுத்து விஜயா. நம்ம வீட்டிலிருந்து யாரும் இதை பண்ணிருக்க வாய்ப்பில்லை என்கிறார். ஆனால் முத்து கார் சாவி இங்கேந்துதான் போயிருக்கு. அதற்கான ஆதாரத்தை கண்டுபிடிச்சிட்டு வரேன் என முத்து கூறுகிறார்.
நீத்து ஹோட்டலில் நம்மளோட ரெஸ்டாரன்ட் டாப் 5 வைத்திருப்பதாக கூறுகிறார். இதனால் அவார்ட் எல்லாம் வரும் என அவர் கூற ஸ்ருதி சந்தோஷப்பட்டு அவருக்கு வாழ்த்து கூறுகிறார்.
ஸ்ருதி இதுக்கு நீங்க ரவிக்கு தான் நன்றி சொல்லணும் எனக் கூற அது எப்படி நான் பல இடங்களில் சென்று இதை புரோமோஷன் செய்தேன் என்கிறார். நீங்கள் என்னதான் புரோமோஷன் செய்திருந்தாலும் வர பத்து பேருக்கும் சாப்பிடிருந்தால்தான் அவங்க 100 பேருக்கு சொல்லுவாங்க என்கிறார்.
இருந்தும் நீத்து அதை ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்க இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கிறது. சண்டை கிச்சன் அருகில் கேட்க ரவி உள்ளே வந்து என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க சத்தம் அங்க வரை கேக்குது என கேட்கிறார்.
ரெஸ்டாரண்டுக்கு ரேட்டிங் நல்லபடியாக வந்திருப்பதாகவும் அதற்கு அவங்க தான் காரணம் என கூறுவதாக ஸ்ருதி கூறுகிறார். ரவி சரி அப்போ அதுக்கு என்ன விடு எனக் கூற அதெல்லாம் முடியாது. உன்னோட வேலையை மதிக்காத இடத்தில் நீ இருக்க வேண்டாம்.
உடனே வேலையை ரிசைன் செஞ்சிட்டு வா என்கிறார். ரவி லூசுத்தனமா பேசாத எனக் கூற உன்னை மதிக்காத இடத்தில் நான் இருக்க மாட்டேன் எனக் கிளம்பி விடுகிறார். வீட்டில் மனோஜ் கடை ஊழியரின் கல்யாணத்துக்கு ரோகிணியை அழைத்து செல்ல விஜயாவிடம் அனுமதி கேட்டு நிற்கிறார்.
ஆனால் விஜயா அவ வராம கல்யாணம் நடக்காதா என கேட்கிறார். இல்லம்மா பத்திரிகை வைக்கும் போதே ரெண்டு பேரையும் சேர்ந்து வரக்கூடியதாக மனோஜ் சொல்ல அதெல்லாம் தேவையில்லை. என்னை நிறைய நீ இந்த வீட்டிலிருந்து யாரையும் அழைத்துச் செல்லக்கூடாது என கூறிவிடுகிறார்.
மனோஜும் அவர் அனுமதிக்காமல் தனியாகவே சென்று விடுகிறார். மறுபக்கம் ரோகிணி முருகனை சந்தித்து தான் கேட்ட ஒரு லட்சத்தை அவரிடம் இருந்து வாங்கிக் கொள்கிறார்.. கல்யாணத்துக்கு முன்னவே வித்யா காசு கேட்பதை தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூற அவங்க உங்களை சிஸ்டரா நினைச்சிட்டு இருக்காங்க. அதெல்லாம் பிரச்னையில்லை என்கிறார் முருகன்.
சிட்டி இடம் வரும் ரோகிணி அவரிடம் பணத்தை கொடுத்து நகையை வாங்கிக் கொள்கிறார். அவர் சென்றுவிட வசீகரன் சிட்டியிடம் ரோகிணி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். இன்னும் ரோகிணி இடமிருந்து நிறைய பணம் கறக்க வேண்டும் என இருவரும் திட்டம் போடுகின்றனர்.