மகாராஷ்டிராவில் கனமழை பெய்தது. இதில் விவசாயிகளின் விளைபொருள்கள் அனைத்தும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் விவசாயி கௌரவ் பன்வார் கனமழையால் தான் கொண்டு வந்திருந்த வேர்க்கடலைகள் அடித்துச் செல்லப்படுவதை பார்த்து தனது கைகளால் அதனை காப்பாற்ற முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த வீடியோ நெட்டிசன்கள் இதயத்தை உலுக்கியது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசினார். அப்போது அவர் வீணான விளை பொருள்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார். இது தொடர்பான வீடியோவை அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.