தூத்துக்குடி மாவட்டம், பரமன்குறிச்சி அருகில் உள்ள வீரப்பநாயக்கர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்தபாண்டி மகன் ராஜன் (48). டிரைவர். இவர் பிக்கப் வேனில் பரமன்குறிச்சியில் இருந்து வாழைக்காய் லோடு ஏற்றிக் கொண்டு தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தார்.
முத்தையாபுரம் மதிக்கட்டான் ஓடை பாலம் அருகில் வரும்போது வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் வேன் மோதி கவிழ்ந்தது. இதில் வேனை ஓட்டி வந்த டிரைவர் ராஜன் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.