“படாத பாடுபடுத்தும் தம்பி”… வெள்ளை குடைக்கு வேலை வந்துவிட்டதோ…? போக மாட்டேன்னு வீரவசனம் பேசினத மறந்துட்டீங்களா..? CM ஸ்டாலின் மீது இபிஎஸ் பாய்ச்சல்…!!
SeithiSolai Tamil May 20, 2025 10:48 PM

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது திமுக அரசினர் விமர்சித்து ஒரே அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,

“மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்” என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் ஸ்டாலின் தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!

தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்… இன்று… டாஸ்மாக்… தியாகி… தம்பி… வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா… எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு! யார்_அந்த_தம்பி என்று பதிவிட்டுள்ளார். மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு செல்ல இருப்பதாக கூறப்பட்ட நிலையில் டாஸ்மாக் ஊழல் மற்றும் அமலாக்கத்துறை ரெய்டு போன்றவற்றிற்கு பயந்து தான் அவர் டெல்லி செல்வதாக இபிஎஸ் மறைமுகமாக சாடியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.