தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சசிகுமார். இவர் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த 1-ம் தேதி அன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவின்ந்த் இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம் எஸ் பாஸ்கர் போன்ற பலர் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரம்மாண்ட இயக்குனர் ராஜமவுலி இப்படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது டூரிஸ்ட் ஃபேமிலி என்ற அற்புதமான திரைப்படத்தை பார்த்தேன், இப்படத்தில் மனதை தொடும் காட்சிகளும், நகைச்சுவைகளும் நிறைந்துள்ளது. இப்படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை என்னை ஆர்வத்துடன் பார்க்க வைத்தது. அபிஷன் ஜீவின்ந்த் சிறப்பாக இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை திரையரங்குகளில் தவறவிடாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து இயக்குனர் ராஜமவுலிக்கு அப்படத்தின் இயக்குனர் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பதிவில் கூறியதாவது, இன்னும் என்னால் இதை நம்ப முடியவில்லை. அவருடைய படங்களை நான் வியந்து பார்த்தேன் அந்த உலகங்களை உருவாக்கிய ஒருவர் ஒருநாள் என் பெயரை கூறுவார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ராஜமௌலி சார் நீங்கள் இந்தப் பையனின் கனவு வாழ்க்கையை விட பெரியதாக்கிவிட்டீர்கள் என்று தெரிவித்தார்.