விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவிற்கும் இத்தனை வயது வித்தியாசமா…?
Tamil Minutes May 20, 2025 08:48 PM

விஷால் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை ஜிகே ரெட்டி பிரபலமான தயாரிப்பாளர். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் விஷால். 2004 ஆம் ஆண்டு செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஷால்.

தொடர்ந்து சிவப்பதிகாரம், திமிரு போன்ற திரைப்படங்களில் நடித்தார் விஷால். 2007 ஆம் ஆண்டில் தாமிரபரணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விஷால். தொடர்ந்து மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன் என வெற்றி திரைப்படங்களில் நடித்து 2010 கால கட்டத்தில் புகழின் உச்சியில் முன்னணி நடிகராக இருந்தார் விஷால்.

பின்னர் பட்டத்து யானை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஆம்பள, பாயும்புலி, மருது, கத்தி சண்டை, துப்பறிவாளன் சண்டக்கோழி 2, மதகஜராஜா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஷால். தற்போது துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில் விஷாலின் திருமணம் எப்போது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நேற்று தனது திருமணத்தை குறித்து அறிவித்திருக்கிறார் விஷால். இவர் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்யவிருக்கிறார். சாய் தன்ஷிகா நடித்த யோகிடா திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும் தங்களது திருமணத்தைப் பற்றியும் திருமண தேதியையும் பகிர்ந்தனர். இருவருக்கும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது என்று அந்நிகழ்ச்சியில் சாய் தன்ஷிகா பகிர்ந்தார். தற்போது விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் இடையே வயசு வித்தியாசம் என்ன என்ற செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதன்படி விஷாலின் வயது 47 சாய் தன்ஷிகாவின் வயது 35. இருவருக்கும் ஆன வயது வித்தியாசம் 12 வருடங்கள் ஆகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.