பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசின் மகள் திருமணத்திற்கு நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் ஒரே நிறத்தில் உடை அணிந்து கலந்து கொண்டனர். இது சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கு ரவி மோகனின் மனைவி ஆதங்கம் தெரிவிக்கும் வாழ்க்கையில் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து பாடகி கெனிஷா தனது வாழ்க்கை துணை என நடிகர் ரவி மோகனை அறிவித்தார். மேலும் தனது மனைவி ஆர்த்தி குறித்தும், மாமியார் சுஜாதா விஜயகுமார் குறித்தும் பல விமர்சனங்களை அவர் முன் வைத்தார்.
இதற்கு அவர் மாமியார், இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அவரது மாமியாரும் பட தயாரிப்பாளருமான சுஜாதா தெரிவித்திருந்தார். இப்படி இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில், பாடகி கெனிஷா மீதும் சில குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து பாடகி கெனிஷா தனது இன்ஸ்டாவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அது வைரலானது.
இந்நிலையில் ஆர்த்தி மீண்டும் பரபரப்பு அறிக்கை ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது ஒருமுறை கடைசியாக அனைவருக்கும் உண்மையை சொல்ல வேண்டிய அவசியம் என்று நினைக்கிறேன். எங்கள் திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்கு பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணம் அல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபர் தான் காரணம். எங்களை பிரித்தது எங்களுக்குள் இருந்த ஏதோ ஒன்று அல்ல.
வெளியில் இருந்து வந்த ஒருவர்தான். உங்கள் வாழ்வின் ஒளி என அறியப்படும் அவர் (பாடகி கெனிஷா) எங்கள் வாழ்வில் இருளை கொண்டு வந்தார் என்பது தான் உண்மை. இந்த நபர் சட்டப்படி விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்பே எங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டார். இது ஒரு வெற்று குற்றச்சாட்டாக அல்ல மாறாக போதுமான ஆதாரங்களுடன் நான் கூறுகின்றேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இதோ அவரது அறிக்கை…
View this post on Instagram