மகேஷ் பாபுவின் காதல் மனைவியான நம்ரதா ஷிரோத்கரின் தங்கை ஷில்பா ஷிரோத்கர். இந்தி படங்கள், டிவி சீரியல்களில் நடித்து வரும் ஷில்பா ஷிரோத்கருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது,
ஹலோ மக்களே. எனக்கு கோவிட் பாசிட்டிவ் என வந்திருக்கிறது. பத்திரமாக இருங்கள் மற்றும் மாஸ்க் அணியுங்கள் என தெரிவித்துள்ளார்.
அந்த போஸ்ட்டை பார்த்து முதல் ஆளாக ஷில்பாவுக்கு தைரியம் சொன்னது பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தான். விரைவில் குணமடையவும் என அக்கா நம்ரதா ஷிரோத்கர் கமெண்ட் போட்டிருக்கிறார்.
எப்படி மேடம் உங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது?. பத்திரமாக இருங்க ஷில்பா. உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 18வது சீசனில் கலந்து கொண்டு சக போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்தார் ஷில்பா ஷிரோத்கர். சில நேரங்களில் ஷில்பா நடந்து கொண்ட விதம் சிலருக்கு பிடிக்காமல் விமர்சிக்கவும் செய்தார்கள். ஆனால் பிக் பாஸ் வீட்டில் தங்கி கேரமாக்களுக்கு முன்பும், பழக்கம் இல்லாதவர்களுடன் இருக்கும் போதும் அது குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டுவதும், விமர்சிப்பதும் சாதாரண விஷயம் தான்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரையும் எல்லா நேரத்திலும் பார்வையாளர்கள் பாராட்டுவது இல்லை. அப்படி இருக்கும் போது ஷில்பா ஷிரோத்கரின் செயல் விமர்சனத்திற்குள்ளானதில் ஆச்சரியம் இல்லை.முன்னதாக பிக் பாஸ் 18 போட்டியாளர்கள் பட்டியலில் ஷில்பாவின் பெயரை பார்த்ததுமே இந்தி பிக் பாஸ் குசும்புக்காரர், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க அவரின் மச்சினியை தேர்வு செய்திருக்கிறார் என்றார்கள் டோலிவுட் ரசிகர்கள்.
மகேஷ் பாபு ரசிகர்களின் ஆதரவு இருந்தபோதிலும் ஷில்பா ஷிரோத்கரால் பிக் பாஸ் 18 டைட்டிலை வெல்ல முடியவில்லை. இந்தி நடிகர் கரண் வீர் மெஹ்ராவுக்கு தான் டைட்டில் கிடைத்தது. மேலும் பிக் பாஸ் 18 வீட்டில் ஷில்பா ஷிரோத்கருடன் தங்கியிருந்த நம்ம சென்னை பெண்ணான ஸ்ருதிகா அர்ஜுன் அனைவருக்கும் டஃப் கொடுத்தார்.
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் தமிழ் பெண் என்கிற பெருமையை பெற்ற ஸ்ருதிகா அர்ஜுன் டைட்டிலை வென்று புது சாதனை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஓட்டு போட்டார்கள். தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழி ரசிகர்கள் ஓட்டு போட்டும் கூட ஸ்ருதிகாவுக்கு பிக் பாஸ் 18 டைட்டில் கிடைக்காமல் போனது. இதையடுத்து இந்தி பிக் பாஸ் போங்காட்டாம் ஆடியதாக தமிழ் பார்வையாளர்கள் கோபம் அடைந்தார்கள்.
இதற்கிடையே ஷில்பாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை பார்த்தவர்களோ மீண்டும் கோவிட் அலை வீசப் போகிறதா என பேசுகிறார்கள். இந்தியாவில் இதுவரை 257 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அரசு தகவல் தெரிவிக்கிறது. அதில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 12ம் தேதியில் இருந்து இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிங்கப்பூரில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.