பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பழமொழி திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இவர் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். இவர் அவ்வப்போது கொடுக்கும் நேர்காணலில் பல சுவாரசியமான பதில்களையும் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது, என்னை ரசிகர்கள் பெரிய பாய் என்று அழைக்கிறார்கள்.
அவர்கள் என்னைச் செல்லமாக அழைக்கும் அந்தப் பெயர் எனக்கு பிடிக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியது கூறியதாவது, பெரிய பாய் என்ற பெயர் எனக்கு பிடிக்காது. அது என்ன பெரிய பாய், சின்ன பாய் நான் என்ன கசாப்புடைய வச்சிருக்கேன் என்று கிண்டலாக தெரிவித்தார். ஏ.ஆர் ரகுமானை பெரிய பாய் என்றும், யுவன் சங்கர் ராஜாவை சின்ன பாய் என்றும் ரசிகர்கள் செல்லமாக அழைத்து வருவது குறிப்பிடத்தக்கது.