கேரளாவில் தென்மேற்கு பருவநிலை துவங்கி உள்ள நிலையில், இன்று 12 மாவட்டங்களில் அதிகன மழைக்கான மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், கேரளாவில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மே 26ம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துக் கொள்ளவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சமயங்களில் கடற்கரை பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில், பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 12 மாவட்டங்களில் இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்ணூர், காசர்கோடு மஞ்சள் அலர்ட்; பத்தினம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டடங்களில் இன்று மே 25ம் தேதி ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை மே 26ம் தேதி திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கபப்ட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் அதிகனமழை பெய்யும். 11 செ.மீ., முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யும். மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் 6 செ.மீ., முதல் 11 செ.மீ., மழை பொழிவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.