ரசிகர்கள் ஹேப்பி..! த்ரிஷா பெருமைா சொன்ன 4, 4, 4 கணக்கு..!
Newstm Tamil May 26, 2025 11:48 AM

தக்லைஃப் விழாவில் பேசிய த்ரிஷா கிருஷ்ணன் கூறியதாவது,


படத்தில் என் கதாபாத்திரம் இசை சார்ந்தது. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுமே பாசிட்டிவானது. அதே சமயம் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு நெகட்டிவ் ஷேட் இருக்கிறது. விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு நீங்களும், சிம்புவும் எப்பொழுது மீண்டும் சேர்ந்து நடிப்பீர்கள் என பலரும் கேட்டு வந்தார்கள்.


தக்லைஃப் ட்ரெய்லரை பார்த்ததும் நீங்கள் சிம்புவுக்கு ஜோடி இல்லையா என்கிறார்கள். 2 நிமிட ட்ரெய்லரை தானே பார்த்திருக்கிறீர்கள். 2 மணிநேரம் படத்தை பாருங்கள் புரியும்.

நான் இந்த விஷயத்தை பெருமையாக பல முறை சொல்லியிருக்கிறேன். நான் மணி சாருடன் 4 படத்தில் வேலை செய்திருக்கிறேன். கமல் சாருடன் 4 படங்கள், ஏ.ஆர். ரஹ்மான் சார் இசையமைத்த நான்கு படங்களில் நடிக்க கொடுத்து வைத்திருக்கிறேன்.

சில படங்கள் எனக்கு ஸ்பெஷலானது. நான் சினிமாவின் மாணவன் என கமல் சார் மீண்டும் மீண்டும் சொல்வார். ஆனால் நான் அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன் என்றார்.

த்ரிஷா சொன்னதை கேட்ட அவரின் ரசிகர்களோ கணக்கு தப்பா சொல்றீங்கமா என்கிறார்கள். அதாவது மணிரத்னம் இயக்கத்தில் 4 படங்கள், கமல் ஹாசனுடன் நான்கு படங்கள் என்பது சரி. இசைப்புயல் இசையமைத்த 7 படங்களில் நடித்திருக்கிறீர்கள் த்ரிஷா. மேலும் குறும்படம் உள்பட சிம்புவுடன் நீங்கள் கூட்டணி சேர்ந்தது மூன்று முறை என்கிறார்கள் ரசிகர்கள்.

பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 பட விழாக்களை போன்றே தக்லைஃப் பட விழாக்களிலும் த்ரிஷா மிகவும் அழகாக இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் நடித்தாலே த்ரிஷா முகத்தில் தனி சந்தோஷம் தெரிகிறது. அந்த சந்தோஷம் தான் அவரின் அழகை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என பேசப்படுகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த பிறகு த்ரிஷாவின் கெரியர் அடுத்த லெவலுக்கு சென்றது என்று கூறலாம். அப்படி இருக்கும் போது தக்லைஃப் படமும் த்ரிஷாவின் கெரியரை மேலும் உயர்த்தும் என நம்பப்படுகிறது.

தக்லைஃப் படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு ரூ. 12 கோடி கொடுத்திருக்கிறார் மணிரத்னம் என முன்பு தகவல் வெளியானது. தக்லைஃபால் தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகை என்கிற பெருமைக்குரியவராகிவிட்டார் த்ரிஷா.

மணிரத்னம் இயக்கத்தில் ஒரேயொரு படத்திலாவது நடிக்க வேண்டும் என பலர் தவமாய் தவமிருக்க த்ரிஷாவுக்கு நான்கு முறை அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. இதற்கிடையே த்ரிஷாவுக்கு தலைக்கனமே கிடையாது. அவர் ரொம்ப அற்புதமானவர். வெளியேயும் உள்ளேயும் அழகானவர் என பாராட்டியிருக்கிறார் கமல் ஹாசன்.


தக்லைஃப் படத்தில் த்ரிஷா யாருக்குத் தான் ஜோடி என்பதை பார்க்க ஜூன் 5ம் தேதியே படத்தை பார்த்துவிட வேண்டும் என முடிவு செய்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் சவுத் குயின் ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.