இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் இணையத்தில் பகிர்ந்த வீடியோவில், ஒரு யானை மிகவும் புத்திசாலித்தனமாக மின்வேலியை தாண்டும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த காட்சியில், யானை நேரடியாக மின் கம்பிகளை தொடாமல், தும்பிக்கையால் கம்பிகளை பிடித்திருக்கும் மரத் தூணை மெதுவாக தள்ளி கீழே விழச் செய்கிறது.
கம்பிகள் தரையில் விழும் வரை கவனமாக காத்திருந்து, பின்னர் எந்த பாதிப்பும் ஏற்படாமல் அந்த இடத்தை தாண்டுகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “இந்த யானை ஒரு மேதை” என ஆச்சரியத்துடன் பாராட்டுகிறார்கள்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையிலேயே, மக்கள் மத்தியில் முக்கியமான கவலை ஒன்று எழுந்துள்ளது. “வனவிலங்குகள் இயல்பு வாழ்க்கை நடத்தும் இடங்களில் மின்மய வேலிகள் ஏன் அமைக்கப்படுகின்றன?” என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது.
யானை போன்ற பெரிய விலங்குகள், தங்களது வழிமுறைகளைப் பின்பற்றும் போதிலும், இவை போல் அனைத்தும் யோசித்து செயல்பட முடியாது என்பதே உண்மை. எனவே, இவ்வகை மின் வேலிகள் விலங்குகளுக்கு பாதிப்பானதாக மாறும் அபாயம் அதிகம் இருக்கிறது என்பதையும் இந்த வீடியோ நமக்கு நினைவூட்டுகிறது.