மத்திய அரசின் கீழ் செயல்படும் பணியாளர் தேர்வாணையம் (SSC), 13ஆம் கட்ட தேர்வின் கீழ் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலியிடங்கள்: 2,423
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.06.2025
விண்ணப்ப முகவரி: https://ssc.gov.in/
வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை (01.08.2025 தேதியின்படி)
விண்ணப்பக் கட்டணம்: ₹100 (SC/ST/PWD/முன்னாள் ராணுவத்தினர் விலக்கு பெறுவர்)
10ம் வகுப்பு தேர்ச்சி:
ஆய்வக உதவியாளர், MTS, சுகாதார ஆய்வாளர், ஓட்டுநர் மற்றும் மெக்கானிக், நூலக எழுத்தர், மருத்துவ உதவியாளர், கேன்டீன் உதவியாளர், பட்டறை உதவியாளர்.
12ம் வகுப்பு தேர்ச்சி:
மருந்தாளுநர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர், எழுத்தர், இளநிலைப் பொறியாளர், தரவு உள்ளீட்டு ஆபரேட்டர், வரவேற்பாளர், கள உதவியாளர், நூலக உதவியாளர்.
பட்டதாரிகள்:
அறிவியல் உதவியாளர், இளநிலை பொறியாளர்கள், உதவி மருந்து ஆய்வாளர், தரவு செயலாக்க உதவியாளர், புவியியலாளர், உணவியல் நிபுணர், ஆசிரியர், சட்ட உதவியாளர், கண்காணிப்பாளர், நர்சிங் அதிகாரி.
சம்பள விவரம்:
ஒவ்வொரு பணியிடத்திற்கும் மத்திய அரசின் ஊதிய நிர்ணய விதிகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
குறிப்பு: ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் தகுதிக்கு ஏற்ப மட்டுமே பதவிகளை தேர்வு செய்ய வேண்டும். தவறான விண்ணப்பங்களை நிராகரிக்க முடியும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாசிக்கவும்.