எலான் மஸ்கின் லட்சிய திட்டத்திற்கு 3வது தோல்வி..! வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்..!
Newstm Tamil June 19, 2025 05:48 PM

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் பூஸ்டரை பத்திரமாக தரையிறக்கும் நோக்கத்துடன் அடுத்தடுத்து ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனையை செய்து அசத்தி வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, ஸ்டார்ஷிப் 36 ராக்கெட் விண்ணில் செலுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ராக்கெட் ஏவுவதற்கு முன்பே, சோதனை கட்டத்திலேயே வெடித்து சிதறியது. இதனால், தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பவில்லை என்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜூன் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் 10வது ராக்கெட்டின் சோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு முன்பு சோதனை கட்டத்திலேயே வெடித்து சிதறி பெரும் தீப்பிழம்பு உருவானது. முன்னதாக, ஸ்பேஸ் எக்ஸின் சூப்பர் ஹெவி பூஸ்டர் மற்றும் ஸ்டார்ஷிப் விண்கலம் இரண்டும் சோதனை முயற்சிக்கிடையே வெடித்தன. இது எலான் மஸ்க்கின் லட்சிய விண்வெளித் திட்டத்திற்கு ஏற்பட்ட தொடர்ச்சியான மூன்றாவது தோல்வியாக பார்க்கப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.