சர்க்கரை நோயாளிக்கு தோல் கருப்பாக மாறுவதை எப்படி தடுக்கலாம் தெரியுமா ?
Top Tamil News June 21, 2025 10:48 AM

பொதுவாக சர்க்கரை நோயாளி கழுத்தின் பின்புறம் தோல் கருப்பாக மாறி இருக்கும்   
.இந்த கருப்பு  அடர்ந்து, சற்று தடிமனாக காணப்படும் .  இதன் அளவுகள் நபருக்கு நபர் மாறுபட்டு கருமை படர்ந்திருக்கும் .இதை எவ்வாறு தடுக்கலாம் என்று நாம் காணலாம் 
1. அது மட்டுமல்லாமல் கழுத்தைத் தவிர உடலின் மற்ற பகுதிகளான அக்குள், இடுப்பு, கை மடிப்பு போன்றவற்றிலும் இந்த கருந்திட்டுக்கள் தோன்றலாம். 
2.இந்த கருப்பான தோல் திட்டுக்களை  குறைப்பதற்கு சரும மருத்துவரின் உதவியை நாடினாலும் நல்ல பலனுண்டு  
3.மேலும்  ஆரோக்கியமான உணவு முறையை கடைபிடிப்பதன் மூலம் இந்த சருமம் தடிமனாவதை தடுக்கலாம் .மற்றும் இந்த கருமையையும் படிப்படியாக குறைத்து ஆரோக்கியமாக வாழலாம் 
4.டைப்-2 நீரிழிவு நோய்க்கான முக்கிய காரணங்களில் நமது உடல் பருமனும்முக்கிய இடம் பெறுகிறது 
5.இந்த உடல் பருமனை தடுக்க தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் நல்ல பலன் உண்டு . 
6.மேலும் இந்த தோலின் மீது  கருமை படர்ந்த சர்க்கரை நோயாளிகளின் உணவில் நார்ச்சத்து நிறைவாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருக்க வேண்டும். 
7.அது மட்டுமில்லாமல் அதிக கலோரி உணவுகள் மற்றும் சர்க்கரை பானங்களை தவிர்க்க வேண்டும். 
8.மேலும் குளிர்பானங்களுக்கு  மாற்றாக மூலிகை டீயை குடிக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.