ஹெலிகாப்டரில் சொகுசு விடுதிக்கு சென்ற பிரபலம்… தரை இறங்கிய போது விபத்து… 2 பேர் படுகாயம்…!!
SeithiSolai Tamil June 28, 2025 04:48 AM

அமெரிக்க நாட்டின் மெக்சிகன் மாகாணம் கிளேடவுன்ஷிப் என்ற நகரில் ஆடம்பரமாக கட்டப்பட்டுள்ள சொகுசு நட்சத்திர விடுதி மற்றும் உணவகம் அமைந்துள்ளது. குளக்கரை ஓரத்தில் அமைந்துள்ள அந்த ஹோட்டலில் ஆடம்பரமான அரசு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்த உள்ளூர் பிரபலம் ஒருவர் ஹெலிகாப்டரில் சொகுசு விடுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது விடுதியின் முன்பாக ஹெலிகாப்டரை தரையிறக்கியபோது அதன் இறக்கை தரையில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் சுக்கு நூறாக நொறுங்கி 2 படுகாயம் அடைந்தனர்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.