தொடர் கனமழையால் கொலம்பியாவில் நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்து 25 பேர் பலி… பலி எண்ணிக்கை உயரும் என பொதுமக்கள் அச்சம்… பெரும் சோகம்…!!
SeithiSolai Tamil June 28, 2025 04:48 AM

தென் அமெரிக்காவின் இயற்கை அழகு மிகுந்த நாடாக கொலம்பியா உள்ளது. அங்கு உலகின் நுரையீரல் என அழைக்கப்படும் 25 சதவீத அமேசான் காடுகளின் பகுதி அமைந்துள்ளது. மறுபக்கம் கடற்கரைகளும், மலைப்பிரதேசங்களும் அமைந்துள்ளது.

அந்த வகையில் எண்ணிலடங்கா இயற்கை அழகை கொண்டுள்ள நாடாக கொலம்பியா அமைந்துள்ளது. இதனால் அங்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் சுற்றுலா செல்கின்றனர்.

அங்கு சுற்றுலா செல்லும் பயணிகள் மலையேற்கறம், படகு சவாரி, பாரா க்ளைடிங், அலை சறுக்கு, வனவிலங்கு பார்வை சவாரி என பல்வேறு வகையான விளையாட்டுகளை இயற்கை எழிலோடு அனுபவிப்பார்கள். அந்த நாட்டின் பிரபலமான மலை பிரதேசம் அண்டியோகிவாவில் மலை பிரதேசம்.

அங்கு கடந்த சில நாட்களாகவே அதிகமான கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெல்லோ என்ற இடத்தில் இடி மின்னலுடன் கூடிய அதிபயங்கரமான கனமழை பெய்ததால் அந்த பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எனவே நீர்மட்டம் அதிகரித்து கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு மலை மீது கட்டப்பட்டிருந்த குடியிருப்புகள் மற்றும் கட்டுமானங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் பேரிடர் மீட்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பெண்கள் குழந்தைகள் என 25 -கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.

மேலும் 10 பேரின் உடல்கள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இன்னும் சிலர் மாயமானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர் . இதனைத் தொடர்ந்து பேரிடர் மீட்பு துறை மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.