என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… சொல்ல சொல்ல கேட்காமல் பைக்கில் பந்தாவாக சென்ற பெண்… இறுதியில்… வைரலாகும் வீடியோ…!!!
SeithiSolai Tamil June 28, 2025 04:48 AM

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் ஓட்டிச் செல்லும் பைக்கின் பின்னால் பெண் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர் நீல நிறத்தில் சேலை ஒன்றை அணிந்திருக்கிறார். அந்த சேலையின் ஒரு பகுதி பைக்கின் டயரில் படுகிறது. இதனைப் பார்த்த மற்றொரு வாலிபர் அவரைப் பின்தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு எச்சரிக்கை விடுகிறார்.

இருப்பினும் அந்தப் பெண் அதனை கண்டுக்கவில்லை. இதையடுத்து சிறிது தூரம் சென்ற பிறகு அந்தப் பெண்ணின் சேலை டயரில் சிக்கி அவர் கீழே விழுகிறார். இதில் அவருக்கு காயம் ஏற்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.