அதிர்ச்சியில் ஊழியர்கள்..! 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க மைக்ரோசாஃப்ட் முடிவு..?
Top Tamil News June 28, 2025 12:48 PM

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல துறைகளிலும் ஆட்டோமேஷனை விரைவுப்படுத்தி வருகிறது. முக்கியமாக ஐடி துறைகளில் ஏஐயின் வருகைக்கு பிறகு ஆட்குறைப்பு மேலும் தீவிரமடைந்துள்ளது. பிரபலமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அவ்வாறாக ஆட்களை குறைத்து வரும் நிலையில், அடுத்து அதன் கேமிங் பிரிவான எக்ஸ் பாக்ஸில் ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல கேமிங் நிறுவனமான ஆக்டிவிஷனின் கையகப்படுத்தலை தொடர்ந்து லாபத்தை அதிகரிக்க மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது கேமிங் துறையான எக்ஸ் பாக்ஸில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதுடன், சில கேமிங் ஸ்டுடியோக்களையும் இழுத்து மூட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த முடிவால் சுமார் 2 ஆயிரம் பேர் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.