இரு சக்கர வாகனங்களில் ஆரம்பித்து கார், வேன், பஸ், ரயில் என்று எல்லாமே மின்சாரத்தால் இயங்க ஆரம்பித்தன. அதன் உச்சக்கட்டமாக, உயரே பறக்கும் விமானத்தையும் இப்பொழுது மின்சாரத்தால் இயக்கிச் சாதனை புரிந்துள்ளார்கள் அமெரிக்காவில்.
‘பீடா டெக்னாலஜீஸ்’ என்ற நிறுவனம், கடந்த சில ஆண்டுகளாகவே மின்சாரத்தால் இயங்கும் விமானத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுத் தற்போது வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். அலியா சிஎக்ஸ்100(Alia cx 100) வகை விமானத்தைத் திருப்திகரமாக இயக்கிக் காட்டியும் உள்ளார்கள். அமெரிக்காவின் கிழக்கு ஹாம்ப்டன் விமான நிலையத்திலிருந்து ஜான் எப்.கென்னடி விமான நிலையம் வரையிலான 130 கிலோ மீட்டர் தூரத்தை, சுமார் அரை மணி நேரத்தில் அந்த விமானம் அடைந்து சாதனை புரிந்துள்ளதாம். ஆனால் போயிங் போன்று பெரிய விமானம் இல்லை. நான்கு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கக்கூடிய குட்டி விமானமாம் அது!
இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் அதன் கட்டணம்தான்! இதே விமான நிலையங்களுக்கு இடையே சாதாரண விமானங்களில் பறக்க வசூலிக்கப்படும் கட்டணம் 160 அமெரிக்க டாலராம். நமது இந்திய ரூபாயில் 13885/-.இதே தூரத்தை ஹெலிகாப்டரில் பயணம் செய்தால், சுமார் 13,885 ரூபாய் ($160) கட்டணம் ஆகும். மேலும், மின்சார இயந்திரங்கள் என்பதால் இரைச்சல் எதுவும் இல்லாத பயணமாக பயணிகளுக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும். விமான போக்குவரத்து வரலாற்றில் இது ஒரு மைல் கல் ஆக பார்க்கப்படுகிறது.
பெட்டா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் CEO கைல் கிளார்க் இது குறித்து கூறுகையில், "இந்த விமானத்தை சார்ஜ் செய்ய சுமார் $8 மட்டுமே செலவாகிறது. விமானி மற்றும் மற்ற செலவுகளை தவிர்த்து பார்த்தால், இது மிகவும் குறைந்த செலவுடையதாகும்" என்றார். 2017-ல் தொடங்கப்பட்ட பெட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம், தனது மின்சார விமான உற்பத்தி மற்றும் வணிகமயமாக்கலை மேம்படுத்த 318 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. CX300 மற்றும் ஏலியா 250 eVTOL மாடல் விமானங்களை உருவாக்கும் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் (FAA) சான்றிதழைப் பெறுவதே இலக்கு என்று தெரிவித்துள்ளது. இந்த விமானத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கடல் மைல்கள் வரை பறக்கும் திறன் உள்ளதாம். இந்த விமானங்கள் நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கிடையே சிறிய தூரப் பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.