மீண்டும் தலை தூக்கும் கொரோனா...மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று; ஒருவர் பலி..!
Newstm Tamil July 04, 2025 10:48 AM

நாட்டில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்று பரவி வருகிறது. எனினும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் 4 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவர். இதுதவிர தானே (1), புனே (1), புனே மாநகராட்சி பகுதி (7) மற்றும் நாக்பூர் (1) ஆகிய பகுதிகளில் பதிவாகி உள்ளன.

இதனால், இந்த ஆண்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,547 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது. இதேபோன்று, நாக்பூரை சேர்ந்த ஒருவர் தொற்றால் பலியாகி உள்ளார் என உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து, கடந்த ஜனவரியில் இருந்து கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 38 பேருக்கு இணை நோய்கள் உள்ளன. மராட்டியத்தில் இதுவரை 31,804 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 2,436 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.