உத்தரப்பிரதேசத்தில் மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் ஒன்று உள்ளது. இது மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள வரலாற்று நகரமான ஆக்ராவில் உள்ள சின்னமான தாஜ்மஹாலில் இருந்து சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டல் (Oberoi Amarvilas Hotel) தான் உத்தரப்பிரதேசத்தில் மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் என்று கூறப்படுகிறது. தாஜ்மஹாலில் இருந்து வெறும் 600 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இது, உலகின் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டு உள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டலான ஓபராய் அமர்விலாஸ், 17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட தாஜ்மஹாலின் மயக்கும் காட்சியை நமக்கு வழங்குகிறது.
இந்த ஹோட்டலில் மொத்தம் 102 அறைகள் உள்ளன. அங்கு வரும் விருந்தினர்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அனைத்து வசதிகளும் உள்ளன. அந்த ஹோட்டலுக்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால், கிங் சைஸ் படுக்கையறைக்கு மட்டுமே ஒரு இரவுக்கு சுமார் ரூ.40,000 செலவாகும். இது வெறும் ஆரம்ப விலை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்வதும் அவசியம்.
ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டலில் உள்ள மிகவும் ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த அறையான கோஹினூரில் தங்க ஒரு இரவுக்கு சுமார் ரூ.11 லட்சம் செலவாகும். இந்த சொகுசு சூட்டில் பளிங்கு யானை சிலைகள், தங்க-குவிமாடம் கொண்ட கூரைகள், கண்ணாடி சுவர்கள் மற்றும் முகலாய கால வடிவமைப்புகளுடன் கூடிய பளிங்கு தூண்கள் உள்ளன.
ஓபராய் அமர்விலாஸ் ஹோட்டலில் ஸ்பா, திறந்தவெளி நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி மையம் ஆகியவை உள்ளன. ஹோட்டலில் உள்ள பிற வசதிகளில் 24 மணி நேர இலவச வைஃபை, வேலட் பார்க்கிங், சலவை சேவை, வரவேற்பாளர், நாணய பரிமாற்றம், வணிக மையம், விருந்து வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளி விருந்தினர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் ஆகியவை அடங்கும்.