“2532 பேருக்கு சட்டவிரோத ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனை”… 741 பேர் பலி… குஜராத்தில் அதிர்ச்சி… CAG ரிப்போர்ட் வெளியாகி பரபரப்பு…!!!
SeithiSolai Tamil July 07, 2025 12:48 AM

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாநில அரசின் சிறுநீரக நோய்கள் மற்றும் ஆராய்ச்சி மையம் (IKDRC) செயல்படுகிறது. இங்கு ஸ்டெம் செல் சிகிச்சை பரிசோதனைகளுக்கு 2352 நோயாளிகள் உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 741 பேர் உயிரிழந்து விட்டதாக தற்போது CAG அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999 முதல் 2017 ஆண்டுகளுக்கு இடையில் இந்த உயிரிழப்புகள் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவை சட்டவிரோதமான பரிசோதனைகள் என்றும் 90% வழக்குகள் தோல்வியடைந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பிறகு சோதனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 569 பேருக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்யப்பட்டதாகவும் அது தோல்வி அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது. இது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பார்த்திவ்சிங் காட்வாடியா இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தற்போது தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.