மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் ஜெர்மனியில் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இவர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் விடுமுறை முடிந்ததும் ஜெர்மனிக்கு செல்ல புறப்பட்டு உள்ளார். இந்நிலையில் விமான நிலையத்திற்கு சென்ற அவரிடம் குடியிருப்பு அனுமதிக்கான நகல் இல்லாததால் அவரை அதிகாரிகள் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கவில்லை.
அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் விமான நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோவில் ஏறி கோரேகான் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 45 வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மாணவர் விமானத்தில் அனுமதிக்காததால்தான் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.