பின்லாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விசித்திரமான மற்றும் கவனம் ஈர்க்கும் போட்டி ஒன்று உலக நாடுகளின் கண்களை திரும்பச் செய்கிறது. இதில் கணவர்கள் தங்கள் மனைவிகளை முதுகில் சுமந்து ஓட வேண்டியிருக்கிறது.
சமதள மேடைகள் மட்டும் அல்லாமல், மணல் மேடைகள், நீர் தடைகள் போன்ற சவாலான நிலப்பரப்புகளும் போட்டிக்காக உருவாக்கப்படுகின்றன. இந்த தடைகளை கடந்து மிக வேகமாக பாய்ந்து முன்னேறும் கணவரே வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இந்த ஆண்டுக்கான மனைவியை சுமக்கும் உலக போட்டி பின்லாந்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து வந்த சுமார் 200 ஜோடிகள் கலந்து கொண்டனர். வெற்றியாளருக்கு அளிக்கப்படும் பரிசும் மற்ற போட்டிகளைவிட அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.
“>
அதாவது, வெற்றி பெற்ற கணவருக்கு அவரின் மனைவியின் எடைக்கு நிகரான அளவில் பீர் பாட்டில்கள் பரிசாக வழங்கப்படும் என்பது தான் இந்த போட்டியின் சிறப்பம்சம்.
இந்த ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த செலாப் மற்றும் ஜஸ்டின் ரூஸ்லர் தம்பதிகள் மிகவும் விறுவிறுப்பாக போட்டியில் பங்கேற்று முதல் பரிசை கைப்பற்றினர். தங்கள் இடையே உள்ள ஒற்றுமையும், உடல் தகுதியும் அவர்களை வெற்றிக்கு வழிவகுத்ததாக போட்டியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நிகழ்வு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வித்தியாசமான போட்டி, உறவிலும் சிரிப்பிலும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.