நேற்று காலை 10 மணியளவில் சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மெயிலில், 'சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த குண்டுகள் வெடித்து சிதறும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலைய பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம், விமான நிலைய இயக்குநர் தலைமையில் நடந்தது. விமான பாதுகாப்பு துறையான பிசிஏஎஸ் எனப்படும் பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், விமான நிறுவனங்களின் அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள், விமான நிலைய போலீஸ் அதிகாரிகள், அதிரடி படையினர் உள்ளிட்ட பல தரப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிலைய போலீசார் உட்பட அனைவரும் பகல் 1 மணி வரை விமான நிலையம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் இல்லாததால். இது வழக்கமாக வரும் புரளி என்று உறுதி செய்தனர்.
இது தொடர்பாக, சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் இ-மெயில் மிரட்டல் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் புரளியால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?