அரசு அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
Dinamaalai July 07, 2025 02:48 PM

 

நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பறக்கும் படை பிரிவில் பணிபுரிந்து வந்தார்.  இவரது மனைவி பிரமிளா, அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிந்த  சுப்பிரமணி 6 மாதங்களுக்கு முன்புதான் இடமாறுதல் மூலம் திருச்சி சென்றிருந்தார். 

இந்நிலையில் தம்பதிகள் இருவரும் நேற்று அதிகாலை வகுரம்பட்டி பகுதியில் ரயில் முன்பு விழுந்து உயிரை மாய்த்து கொண்டனர். இருவரது உடல்களை கைப்பற்றிய ரயில்வே போலீசார் அவர்களது தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்த முதல்கட்ட விசாரணையில், மகளின் காதலுக்கு சுப்பிரமணியும், பிரமிளாவும் எதிர்ப்பு தெரிவித்தனர். காதலை கைவிட மறுத்த அவர் அவரையே திருமணம் செய்து கொள்வேன் என உறுதியாக கூறிவிட்டார் .  இதனால் விரக்தி அடைந்த கணவன்- மனைவி இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.