தமிழகத்தில் 2739 விடுதிகளில் 1.79 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இனி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் சமூக நீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது, பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் – சமூக நீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்! என்று கூறியுள்ளார்.