தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் சென்னை நீதிமன்றத்தில் ஜூலை 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு, நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மே 22, 2025 அன்று பெருமளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து ஸ்ரீகாந்த் ஜூன் 23 அன்றும், கிருஷ்ணா ஜூன் 26 அன்று கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், கிருஷ்ணாவின் வழக்கறிஞர், அவரது மருத்துவ பரிசோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளார். ஸ்ரீகாந்தின் வழக்கறிஞர், அவரிடம் இருந்து எந்த போதைப்பொருளும் கைப்பற்றப்படவில்லை, மேலும் விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறினார்.
இந்த வழக்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பப்பில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து தொடங்கிய விசாரணையில் இருந்து உருவானது. இதில், பிரசாத் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். பிரசாத் 3 ஆண்டுகளாக பெங்களூரைச் சேர்ந்த கார்ட்டலில் இருந்து கோகேய்ன் பெற்று, ஸ்ரீகாந்த் உட்பட பலருக்கு விநியோகித்ததாக காவல்துறை தெரிவித்தது. கிருஷ்ணாவின் கூட்டாளியான கெவினிடம் இருந்து 0.5 கிராம் கோகேய்ன், 10.3 கிராம் மெத்தம்பெடமைன், 2.75 கிராம் MDMA, 2.4 கிராம் OG கஞ்சா மற்றும் 30 கிராம் வழக்கமான கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கிருஷ்ணா, ஆரம்பத்தில் தலைமறைவாக இருந்து, ஜூன் 25 அன்று தவுசன்ட் லைட்ஸ் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரது மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணையில், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டதற்கு “உறுதியான ஆதாரங்கள்” இருப்பதாக காவல்துறை கூறியது. வாட்ஸ்அப் மூலம் கிருஷ்ணா மற்றும் கெவின், போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், கிருஷ்ணா தனது நண்பர்களிடையே போதைப்பொருட்களை விநியோகித்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் கோரிய மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை நாளை ஒத்திவைத்தது ஐகோர்ட்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?