சமீப காலங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர், கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வாகரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பவபூரணி(29), எம்.பி.பி.எஸ் முடித்த இவர், கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுகலை மயக்கவியல் பிரிவில் படித்து வந்தார். அதே மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அவசர பிரிவில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் மருத்துவமனை கழிவறைக்குச் சென்ற அவர் நீண்ட நேரம் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து பார்த்த போது, பவபூரணி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பீளமேடு போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பவபூரணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் மாணவியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?