திருமணம் செய்து கொள்வதாக மோசடி.. ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்!
Dinamaalai July 09, 2025 06:48 PM


திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணை ஏமாற்றியதாக ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார் எதிரொலியாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் (27). இவர் உபி.,மாநில உள்ளூர் அணிக்காக விளையாடி வருவதுடன் ஐபிஎல் தொடரின் பெங்களூரு அணியிலும் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவர் மீது காஸியாபாத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் பாலியர புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில் "கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் தன்னிடம் பல நாட்களாக நட்பில் இருந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக பல முறை செக்ஸ் தொந்தரவு செய்தார். உடல் ரீதியாக நான் பாதிக்கப்பட்டேன் ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் நான் மனமுடைந்தேன். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என புகாரில் கூறியுள்ளார். போலீசாரும் இவரிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் போலீசாரால் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.