அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என்று கூறிய நியூ யார்க் மேயர் மம்தானிக்கு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
33 வயதான இந்திய வம்சாவளி அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஜுஹ்ரான் மம்தானி, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை தோற்கடித்து, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மீரா நாயர் மற்றும் இந்திய-உகாண்டா கல்வியாளர் மஹ்மூத் மம்தானியின் மகன் தான் சோஹ்ரான் மம்தானி ஆவார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தற்போது நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மம்தானி மேயராக தேர்வானதில் இருந்து அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது, ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று நியூ யார்க் மேயர் மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மம்தானியின் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், மம்தானி ஒரு சோசலிஸ்ட் அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் யூத மக்களைப் பற்றி சில மோசமான விஷயங்களைச் சொல்லியுள்ளார். மம்தானிக்கு வெள்ளை மாளிகை வழியாகதான் பணம் வருகிறது. அவருக்கு வெள்ளை மாளிகை வழியாக பணம் தேவை. அவர் இப்படி நடந்துகொள்வது அவருக்கு நல்லதல்ல. இல்லையெனில் அவருக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?