1980களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அருணா. இவர் இயக்குனர் பாரதிராஜாவின் இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானார். இதனையடுத்து கரிமேடு கருவாயன், முதல் மரியாதை உட்பட பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் நடிகை அருணா வசித்து வருகிறார்.
இவர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அருணாவின் கணவர் மோகன் குப்தா வீடு உள்கட்டமைப்பு அலங்கார பொருள்கள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனம் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் காலையில் 7:00 மணி முதல் அவரது வீட்டில் பரபரப்பாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?