“3 மாத காதல் திருமணம்… தாலி கழற்றி விட்டு சென்ற மனைவி… பின்னே நடந்த துயர சம்பவம்..!!”
SeithiSolai Tamil July 11, 2025 10:48 AM

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காமராஜர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்த தீனதயாளன் (22), ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினியர். இவர் லாரன்ஜினா (20) என்பவரை காதலித்து, மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, லாரன்ஜினா சமீபத்தில் தனது சொந்த ஊரான சேக்காடு பகுதியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்று தங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, தீனதயாளன் நேற்று தனது மனைவியை நேரில் சந்தித்து, மீண்டும் குடும்ப வாழ்க்கையைத் தொடருமாறு கேட்டுள்ளார்.

ஆனால், லாரன்ஜினா அவரை தவிர்த்து, தாலியை கழற்றி கீழே வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மனமுடைந்த தீனதயாளன், அதே பகுதியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் இருந்து சுமார் 20 அடி உயரத்தில் கீழே பாய்ந்தார்.

இந்த சம்பவத்தில் தீனதயாளன் படுகாயமடைந்து, உடனடியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் திருமணமானது இளவயதிலேயே உயிரிழப்பிற்கு காரணமாக மாறியதால், இந்த சம்பவம் பலரையும் உள்பட பரிதாபத்தில் ஆழ்த்தியுள்ளது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.