நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதுரையில் ஆடு மாடுகள் மேய்க்கும் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் ஆடு மாடுகள் ஏராளமாக கலந்து கொண்ட நிலையில் முதல் முறையாக அவர் ஆடு மாடுகள் முன்னிலையில் பொதுக்குழு மேடையில் உரையாற்றினார். அவர் பேசியதாவது, மேய்ச்சல் நிலம் எங்களுடைய உரிமை. கிராமப்புறங்களில் இப்போது ஆடு மாடு மேய்ப்பது வெகுவாக குறைந்து வரும் நிலையில் காடுகளை பாதுகாப்பது எங்களுடைய கடமை எனக் கூறி வனப்பகுதிகளில் மேய்ச்சலுக்கு அனுமதிப்பது கிடையாது.
ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளில் ஆடு மாடு மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. இந்த தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தான் இந்த மாநாடே நடைபெறுகிறது என்று கூறினார். மேலும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து இயற்கை விவசாயம், கள் இறக்க அனுமதிப்பது, ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பது போன்ற விஷயங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்..