இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்து போட்டிகள் (India vs England Test Series) கொண்ட டெஸ்ட் தொடரின் 3வது போட்டியானது நேற்று அதாவது 2025 ஜூலை 10ம் தேதி முதல் தொடங்கியது. இந்த போட்டியில் நடந்த நிகழ்வின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் (Mohammed Siraj) பேஸ்பாலை கேலி செய்வது போன்று இடம் பெற்றிருந்தது. அதுவும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட்டை (Joe Root) ஸ்லெட்ஜிங் செய்து கொண்டிருந்தார். ரூட்டும் ஒல்லி போப்பும் மிக மெதுவான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
பேஸ்பால் என்றால் என்ன?முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், பென் ஸ்டோக்ஸூடன் இணைந்து பேஸ்பால் என்ற சொல் தொடங்கியது. பேட்ஜ்பால் என்பது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய பேட்டிங் பாணியாகக் கருதப்படுகிறது. அதன்படி, பேட்ஸ்மேன்கள் வேகமாகவும் ஆக்ரோஷமாகவும் விளையாடி எதிரணிகளுக்கு பயம் காட்டுவது ஆகும்.
பேஸ்பாலை கேலி செய்த சிராஜ்:‘Bazball, come on, I want to see’.
– Siraj sledging English batters. 😂🔥pic.twitter.com/cNj7WrHVV3
— Mufaddal Vohra (@mufaddal_vohra)
ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கலம் கூட்டணி பிறகு, பேட்ஜ்பாலின்படி, டெஸ்ட் போட்டிகளில் கூட இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்து ரசிகர்களை போர் அடிக்காமல் சந்தோசப்படுத்துவார்கள். ஆனால் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இது எதுவும் நடக்கவில்லை. இங்கிலாந்து 44 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன் பிறகு, ஜோ ரூட் மற்றும் ஓலி போப் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
ஜோ ரூட் 49 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். ஓலி போப் 53 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த நேரத்தில் சிராஜ் பந்து வீசிக் கொண்டிருந்தார். அவர் ரூட்டுக்கு பந்து வீசினார், ரூட் கட் செய்ய முயற்சிக்கும்போது அவருக்கு அடிப்பட்டது. இதன் பிறகு சிராஜ் அவரிடம், “பேட்ஜ், பேட்ஜ், பேட்ஜ்பால், இப்போது பேட்ஜ்பால் விளையாடு. நான் அதைப் பார்க்க விரும்புகிறேன்” என்று பேசுவதைக் காண முடிந்தது. சிராஜின் இந்த கூற்று ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது. சிராஜ் ரூட்டை ஸ்லெட்ஜிங் செய்து தொந்தரவு செய்ய முயன்றார். ஆனால் ரூட் எந்தவொரு கோபத்தை வெளிப்படுத்தாமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தியாவுக்கு எதிராக 3000 ரன்களை நிறைவு செய்த ரூட்:இந்தியாவுக்கு எதிராக 45 ரன்கள் எடுத்த உடனேயே ரூட் வரலாறு படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 3000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக 13 அரைசதங்களையும் 10 சதங்களையும் அடித்துள்ளார்.