இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்டாட்டம் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் மான்செஸ்டர் நகரில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அந்நாட்டு அணியின் ஜெர்சியை அணிந்து மேட்ச் பார்ப்பதற்காக வந்துள்ளார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் சென்று போட்டியில் விளையாடாத அணியின் ஜெர்சியை அணிய வேண்டாம். அதனை மறைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது.
அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த ரசிகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மொபைல் கேமராவில் அதனை பதிவு செய்து சோசியல் மீடியாவில் வெளியிட்டார். ஒரு சில நிமிடங்களில் மேலும் சில பாதுகாப்பு அதிகாரிகள் வந்து அந்த ரசிகருடன் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.