22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல் காந்தி.. பட்டியலை தயார் செய்ய கோரிக்கை..!
Webdunia Tamil July 29, 2025 09:48 PM

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, பாகிஸ்தான் தாக்குதல்களில் பெற்றோர்களை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையோர கிராமங்களை குறிவைத்து நடத்திய ஷெல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ராகுல் காந்தி உதவ முன்வந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் ராணுவத்தின் ஷெல் தாக்குதல்கள் எல்லை கிராமங்களை கடுமையாகப் பாதித்தன. இந்த தாக்குதல்களில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், ராகுல் காந்தி பெற்றோர்களை இழந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலை தயார் செய்யுமாறு உள்ளூர் கட்சித் தலைவர்களிடம் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். இந்தப் பட்டியல் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ராகுல் காந்தி தத்தெடுக்கும் இந்த குழந்தைகள் அனைவரின் கல்வி செலவையும், அவர்கள் கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும் வரை ஏற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் இந்த உதவியால் ஒரு சிறந்த எதிர்காலம் 22 குழந்தைகளுக்கு கிடைக்கும்.


Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.