தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விஜய் MYTVK என்ற உறுப்பினர் செயலியையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை எட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
த.வெ.க தலைவர் விஜய் “வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற நோக்கில் உறுப்பினர்களை சேர்த்தால் நம்மால் வெல்ல முடியும்.” என தெரிவித்துள்ளார். இது குறித்து ” இதற்கு முன்பு 1967, 1977 ல் ஆள் பலம், அதிகார பலத்தை எதிர்த்து புதிதாக வந்தவர்கள்தான் வெற்றி பெற்றுள்ளனர். அந்த தேர்தல்கள் மிகப்பெரிய தேர்தலாக இருந்தது.
அந்த 2 மாபெரும் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர்களுடைய பலத்தையும் அதிகாரத்தையும் எதிர்த்து நின்று தான் புதிதாக வெற்றிபெற்றுள்ளனர். ஊருக்கு ஊர்…வீட்டுக்கு வீடு..விதிக்கு விதி என செய்தாலே நாம் இந்த தேர்தலில் வெற்றிபெறலாம். இந்த நேரத்தில் நான் அறிஞர் அண்ணா சொன்னதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக்கொள் என சொல்லியிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா சொன்னது போல் மக்களிடம் செல்வோம், மக்களிடமிருந்து கற்றுக் கொள்வோம், மக்களோடு வாழ்வோம், மக்களோடு சேர்ந்து திட்டமிடுவோம். இந்த செயலி அறிமுக விழா. இதற்கு பிறகு மதுரையில் மாநாடு…மக்கள் சந்திப்பு…பயணம் என நடைபெறவுள்ளது. இதற்கு பிறகு மக்களுடன் தான் வாழப்போகிறோம் நமக்கு நாம் இருக்கிறோம் நமக்கு மக்கள் இருக்கிறார்கள் இதனை தவிர வேற என்ன வேணும்? வெற்றி நிச்சயம்” எனவும் விஜய் பேசியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?