செம அறிவிப்பு..! நாளை முதல் அமல்..! ரூ.1,00.000 கோடி மதிப்பில் வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை திட்டம்..!
Top Tamil News July 31, 2025 07:48 PM

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையர் விஜய் ஆனந்த்  அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளார். அதில், “இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இ.எல்.ஐ. திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இத்திட்டத்தின் மூலம் 3½ கோடி தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் அமைப்புசாரா தொழில்துறைகளில் உள்ளவர்கள் அமைப்பு சார்ந்த தொழில் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படுவார்கள். இதனை தகுதியான அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டம் வேலைவாய்ப்புக்கு செல்லும் இளைஞர்களுக்கு பயனளிப்பதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கம் அளிக்கும். இந்த திட்டத்தின் மூலம் புதிய தொழிலாளர்களை சேர்க்கும் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.  

அதன்படி, ரூ.10,000 வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை நிறுவனத்தில் சேர்க்கும்போது ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ.1000 வீதமும், ரூ.10000  முதல் ரூ.20,000 வரை சம்பளத்தில் தொழிலாளர்களை சேர்க்கும் போது ரூ.2,000 வீதமும், ரூ.20,000லிருந்து ரூ1 லட்சம் வரை  சம்பளம் பெறும் தொழிலாளர்களை சேர்க்கும் பட்சத்தில் ரூ.3,000 வரையிலும் நிறுவன உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டம் நாளை ஆகஸ்டு 1ம்  தேதி முதல் அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது 40 லட்சம் வருங்கால வைப்பு நிதி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன" எனக் கூறியுள்ளார்.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.