கோயம்புத்தூரில் இருந்து இன்டர்சிட்டி ரயில் நேற்று சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரயில் நேற்று காலை ஈரோடு ரயில்வே நிலையத்திற்கு வந்த நிலையில் நடைமேடையில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் டீ வாங்குவதற்காக திடீரென மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே இறங்க முயற்சி செய்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்து விட்டதால் நடைமேடைக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிக் கொண்டார். அதே நேரத்தில் அவர் தண்டவாளத்தில் இருந்த கம்பியை பிடித்துக் கொண்டதால் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் அதனை கவனித்து உடனடியாக அவரின் கையை பிடித்து மேலே இழுத்து உயிரை காப்பாற்றினார்.
அந்த போலீஸ்காரர் நொடியும் தாமதிக்காமல் ஓடோடி வந்து அந்தப் பயணியின் உயிரை காப்பாற்றிய நிலையில் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த போலீஸ்காரருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்ஹ