தமிழகத்தில் சமீப காலமாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் கூட அரங்கேகிறது.
அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் துப்புரவு தொழிலாளியாக வட மாநிலத்தைச் சேர்ந்த அதாவது மாநிலத்தை சேர்ந்த ஜெய் என்பவர் ஈடுபட்டிருந்தார்.
இவர் அந்த பள்ளியில் படிக்கும் ஒரு ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி பள்ளியின் முன்பாக பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.