Abhishek Sharma: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
TV9 Tamil News July 31, 2025 12:48 AM

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணி தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 5வது (India – England 5th Test) மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை அதாவது 2025 ஜூலை 31ம் தேதி முதல் லண்டனில் உள்ள ஓவல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 24 மணிநேரத்திற்கு குறைவான நேரமே உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்துள்ளார். அதாவது, இந்தியாவின் இளம் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா (Abhishek Sharma) டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடம் ( ICC T20I Rankings) பிடித்துள்ளார்.

அபிஷேக் சர்மா முதலிடம்:

டி20ஐ தரவரிசையை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை நம்பர் 1 இடத்தில் இருந்த டிராவிஸ் ஹெட் 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். இதையடுத்து, ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவிற்கு பிறகு டி20யில் முதலிடம் பிடித்த 3வது இந்திய வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார். அபிஷேக் சர்மா 829 ரேட்டிங் புள்ளிகளையும், டிராவிஸ் ஹெட் 814 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.

ALSO READ: 2019ல் விராட் கோலியை நீக்க திட்டம் போட்டதா ஆர்சிபி? முன்னாள் ஆல்ரவுண்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அபிஷேக் சர்மா முதலிடத்திற்கு முன்னேறியது எப்படி..?

Topping the charts 🔝 😎

Congratulations to Abhishek Sharma, who becomes the Number One batter in ICC Men’s T20I rankings 👏👏#TeamIndia | @IamAbhiSharma4 pic.twitter.com/dKlm5UVsyv

— BCCI (@BCCI)


கடந்த 2024ம் ஆண்டு ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின்போது டிராவிஸ் ஹெட், சூர்யகுமார் யாதவை முந்தி முதலிடம் பிடித்தார். அந்த முதலிடம் தற்போது வரை தொடர்ந்தது. ஆனால், சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆஸ்திரேலிய டி20 அணியில் இருந்து ஹெட் விலகினார். இது அபிஷேக் சர்மாவிற்கு சாதகமாக அமைந்தது. ஹெட்டுக்கு முன்பு சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்திருந்தார், அதே நேரத்தில் 2014 மற்றும் 2017 க்கு இடையில் டி20 கிரிக்கெட்டில் நீண்ட காலத்திற்கு முதலிடம் பிடித்த வீரர் விராட் கோலி ஆவார்.

ஐசிசி டாப் 5 டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியல்:
  • அபிஷேக் சர்மா (இந்தியா) – 829 மதிப்பீடுகள்
  • டிராவிஸ் ஹெட் (ஆஸ்திரேலியா) – 814 மதிப்பீடுகள்
  • திலக் வர்மா (இந்தியா) – 804 மதிப்பீடுகள்
  • பில் சால்ட் (இங்கிலாந்து) – 791 மதிப்பீடுகள்
  • ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) – 772 மதிப்பீடுகள்
அபிஷேக் சர்மா சர்வதேச டி20 வாழ்க்கை:

அபிஷேக் சர்மா இதுவரை இந்திய அணிக்காக வெறும் 17 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், வெறும் 16 இன்னிங்ஸ்களில் 193.84 ஸ்ட்ரைக் ரேட்டில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் உதவியுடன் 535 ரன்கள் எடுத்துள்ளார்.

ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் மோதலில் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆதரவு தெரிவித்த சவுரவ் கங்குலி!

இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் எடுத்த பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா ஆவார். கடந்த 2025 பிப்ரவரி 2ம் தேதி இங்கிலாந்துக்கு எதிராக 54 பந்துகளில் 13 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உதவியுடன் 135 ரன்கள் எடுத்தார். மேலும், இந்திய அணிக்காக அதிவேக சதம் மற்றும் அரைசதம் அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அபிஷேக் சர்மா படைத்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.