பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் வேலை – 10,277 பணியிடங்களுக்கு IBPS அறிவிப்பு!
Seithipunal Tamil August 02, 2025 04:48 PM

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் (வாடிக்கையாளர் சேவை அசோசியேட்) பணியிடங்களை நிரப்ப, IBPS (வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம்) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2025

இந்தியாவில் உள்ள முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் ஆண்டு தோறும்  ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப்பணியாளர் தேர்வு ஆணையம் வாயிலாக நிரப்பபடுகிறது. அந்த வகையில் தற்போது வங்கிகளில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

 பணியிட விவரம்:
பணி: கிளர்க் (Customer Service Associate)

மொத்த காலிப்பணியிடங்கள்: 10,277

 கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

 வயது வரம்பு:
21.08.2025 

குறைந்தபட்சம்: 20 வயது

அதிகபட்சம்: 28 வயது

 சம்பள வரம்பு:
₹24,050 முதல் ₹64,480 வரை + பிற ஸதீனங்கள்

 தேர்வு முறை:
Preliminary Exam

Main Exam
(இரண்டும் ஆன்லைன் முறையில் நடைபெறும்)

 தேர்வு மையங்கள் (தமிழ்நாடு):
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, நாகர்கோவில், திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, வேலூர், தருமபுரி, திண்டுக்கல், நாமக்கல், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி

 விண்ணப்பக் கட்டணம்:
பொதுப்பிரிவு / OBC: ₹850

SC / ST / PwBD: ₹175

முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.08.2025

Preliminary தேர்வு: அக்டோபர் 2025

Main தேர்வு முடிவு: நவம்பர் 2025

 அரசாணை மற்றும் முழு அறிவிப்பு PDF:
 படிக்க/பதிவிறக்க க்ளிக் செய்யவும்

Apply Now!   ibps.in
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.