ஏழை எளிய மக்களின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக தங்கம் உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அதற்காக தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்று 9370 ரூபாயாகவும் சவரனுக்கு 600 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,960-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது, கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூ.9,380-க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ரூ.75,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 126 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 126000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.