தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஒரு முக்கிய அறிக்கையில், “எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் தலைவர் விஜயகாந்தின் புகைப்படம், பெயர், வசனங்களை தங்களது தனிப்பட்ட அரசியல் விளம்பரத்திற்கோ, பிரச்சாரத்திற்கோ பயன்படுத்தக்கூடாது” எனத் தெளிவாக அறிவித்துள்ளார்.
மேலும், “விஜயகாந்த் அவர்களின் மரியாதைக்கும், அவரது புகழுக்கும் பொருந்தும் விதமாக, தேர்தல் காலங்களில் தேமுதிக கூட்டணியில் உள்ள கட்சிகள் மட்டும் அவரது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்தலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது, விஜயகாந்த் பெயரை தவறாக அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் முயற்சிகளை தடுக்க எடுத்த முக்கிய முடிவாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.