நாடு முழுவதும் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மழைக்காலத்தில் (Monsoon) கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, டெங்குவின் அபாயமும் அதிகரிக்கிறது. கொசு கடித்தவுடன், வைரஸ் உடலில் நுழைந்து அமைதியாக செயல்படத் துவங்குகிறது. டெங்கு வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியுடன் போராடத் தொடங்குகிறது. இதனால் நம் உடலுக்கு சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆரம்ப நாட்களில் அதை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும். பல நேரங்களில் சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் (Fever) மட்டுமே இருக்கும். இதனால் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தால், சரியாகிவிடும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அலட்சியமாக இருந்தால் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் இந்த கட்டுரையில் டெங்குவின் 3 ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.
இதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காணவில்லை என்றால் வைரஸ் இரத்தத்திற்குள் பரவி, பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை பாதிக்கத் தொடங்குகிறது. இந்த நேரத்தில்தான் ஒருவர் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஆரம்பத்தில், அறிகுறிகள் மிகவும் லேசானவை, எனவே பலர் இதை ஒரு சாதாரண காய்ச்சல் என்று நினைத்து புறக்கணிக்கிறார்கள். இந்த அலட்சியம் பின்னர் நிலைமையை மோசமாக்கும்.
இதையும் படிக்க : இயற்கையாக கல்லீரலை சுத்தப்படுத்துவது எப்படி ? இதை டிரை பண்ணுங்க!
டெங்கு காய்ச்சல் குறித்து மனதில் கொள்ள வேண்டியவைஅறிகுறிகள் தீவிரமடையத் தொடங்கும் போது தான் டெங்குவின் உண்மையான ஆபத்து தொடங்குகிறது. உடலில் வைரஸின் தாக்கம் காய்ச்சல் ஏற்படும். கிட்டத்தட்ட ஒவ்வொரு டெங்கு நோயாளிக்கும் பொதுவான சில அறிகுறிகள் காணப்படுகின்றன. அதனை சரியான நேரத்தில் அடையாளம் காணப்பட்டால், நோய் பரவாமல் தடுக்கலாம்.
டெங்கு நோயாளிகளுக்கு ஏற்படும் பொதுவான 3 அறிகுறிகள்டெங்கு காய்ச்சலின் ஆரம்ப கட்டத்தில் நோயாளிகளுக்கு பொதுவான 3 அறிகுறிகள் தோன்றும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிக்க : கடைகளில் கொடுக்கும் பில்லை தொட்டால் கேன்சர் வருமா ? சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
ஆரம்பகால அறிகுறிகளை புரிந்துகொண்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் டெங்கு தீவிரமடைவதைத் தடுக்கலாம். டெங்குவைத் தடுப்பதற்கான சிறந்த வழி கொசுக்களிடமிருந்து விலகி இருப்பது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்க அனுமதிக்க கூடாது. உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.