உலர் பழப்பொடியைச் சேர்த்துக் குடித்து வந்தால், எலும்புகள் வலுவடைவதோடு, உடலில் உள்ள ரத்தப் பற்றாக்குறையும் நீங்கும். அதோடு எல்லா வயதினரும் இந்தப் பொடியை உட்கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது, மற்றும் மிகவும் சுவையானதும் கூட. உலர் பழ பொடியை தினமும் உட்கொள்வதால் உடலில் உள்ள சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும். அதை எங்கேயும் தேடி அலைய வேண்டாம். வீட்டிலேயே செய்யக்கூடியது தான்.
உலர் பழங்கள் பொடி செய்ய தேவையான பொருட்கள்
தாமரை விதை - 1 கப்
பாதாம் - 1/4 கப்
கசகசா - 1 டீஸ்பூன்
வறுத்த கொண்டைக்கடலை - 1/4 கப்
உலர் பேரீச்சம்பழம் - 8-10
பனங்கற்கண்டு - 1/4 கப்
சுக்குத் தூள் - 1 டீஸ்பூன்
உலர் பழங்களை பொடி செய்யும் முறை:
முதலில் தாமரை விதையை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு, குறைந்த தீயில் வறுக்கவும். தாமரை விதைகள் பொன்னிறமாக மாறியதும், அவற்றை ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைக்கவும். அதன் பிறகு பாதாம் மற்றும் கசகசாவை சேர்த்து லேசாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து, வறுத்த கொண்டைக்கடலை மற்றும் உலர்ந்த பேரீச்சம்பழத்தை எடுத்து, அவற்றை ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
இப்போது கொண்டைக்கடலை மற்றும் உலர்ந்த பேரீச்சம்பழம் போட்டு 2 சுத்து அரைத்து எடுக்கவும் அதோடு பாதாம், கசகசா, தாமரை விதை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் மாற்றி 30 விநாடிகள் அரைக்கவும். இதற்குப் பிறகு, மிக்ஸி ஜாடியின் மூடியைத் திறந்து அதில் பனங்கற்கண்டு மற்றும் சுக்குத் தூள் போட்டு மூடி வைத்து மீண்டும் அரைக்கவும்.