இந்தியாவில் நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
78 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (15 ஆகஸ்ட் 1947) இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது.
வைஸ்ராய் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன் இந்திய சுதந்திரத்தை அறிவித்தார்.
நூற்றாண்டுகளாக நடந்த சுதந்திரப் போராட்டத்தின் பலனாக இது நிகழ்ந்தது.
முதல் சுதந்திர தினத்தன்று நாட்டில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டது. மக்கள் சுதந்திரத்தின் மகிழ்ச்சியில் ஊர்வலங்கள், கலாசார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டனர்.
ஆனால், அதே சமயம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையால் கோடிக்கணக்கானோர் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு