தமிழகம் மட்டும் அல்லாமல் தெலுங்கானாவிலும் தனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக பாஜவில் சேர்ந்ததாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். திரைப்பட நடிகை கஸ்தூரி மற்றும் திருநங்கையான நடிகை நமீதா மாரிமுத்து ஆகியோர் இன்று சென்னையில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜவில் இணைந்தார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் பேசியதாவது:
கட்சி சார்ந்த அரசியலில் இருக்கக்கூடாது. இயக்கம் சார்ந்த சமூகப்பணி மட்டும் செய்ய வேண்டும் என நினைத்த எனக்கு, சமீப காலமாக தமிழகத்தில் நடக்கும் பல விஷயங்கள் மன உளைச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த விடையங்கள் தொடர்பாக அவருடைய நண்பர் மற்றும் அரசியல் சார்ந்த நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் இரண்டு முறை நயினார் நாகேந்திரனிடம் பேசிய போது, அவர், ' வெளியில் இருந்து நீ கத்தினாலும் அது ஒரளவு தான் கேட்கும். ஏற்கனவே சங்கி என்ற முத்திரை உன்மீது உள்ளது. அதனை தைரியமாக நல்லா செய்யலாம் என சொன்னார். இதனையே அனைவரும் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தின விழாவுக்கு கமலாலயம் சென்று, நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜவில் சேர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களுக்காக அவருடைய குரல் தொடர்ந்து ஓங்கி ஒலித்து கொண்டு இருக்கும் எனவும், ஒரு சில விஷயங்களை வெளியில் இருந்து செய்வதை விட, உள்ளே இருந்து செய்வது ஒரு விரைவான பலனை கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமைப்புக்கு உள்ளே இருந்து செய்ய வேண்டியது என்பதற்காக பாஜவில் இணைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கடந்த 05 ஆண்டுகளாக தெலுங்கானாவில் இருக்கிறேன். புகுந்த வீடாக மட்டும் அல்லாமல் எனக்கு பெரிய ஆதரவு கொடுத்தது தெலுங்கு மக்கள் தான் என்று தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கடமையாற்ற வேண்டியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகம் மட்டும் அல்லாமல் புகுந்த வீடான தெலுங்கானாவில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்றால் தேசிய நீரோட்டம் தான் சரி என்று மேலும் பேசியுள்ளார்.
அத்துடன், அதிமுக இரட்டை இலை, எம்ஜிஆர் ஜெயலலிதா அப்படி என்ற விஸ்வாசம் என்றும் இருக்கும். அதேப்போல் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இருக்கும் பின்னணி எனக்கும் அந்த விஸ்வாசம் இருக்கலாம் பிரச்னை இல்லையே என்று கஸ்தூரி நிருபர்களிடம் கூறியுள்ளார்.